இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்திக்கும் மோடி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதல் முறையாக அவரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.