காசி தமிழ் சங்கமம் விழா ஏற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
டெல்லி சாஸ்திரி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கும் #காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளைக் கொண்டாடும் வகையில் இந்த பிரமாண்டமான நிகழ்வை தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
உயர்கல்வி துறை கூடுதல் செயலாளர் ஸ்ரீ எஸ். கே. பர்ன்வால், பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ கௌரவ் திவேதி, சிபிசியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ.ஒய்.கே. பவேஜா, பிஐபியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ.பி.நாராயணன், உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.