திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்கள் கைதுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மதுரையில். 144 தடை உத்தரவு போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திராவிட மாடல் அரசு, தமிழக முதலமைச்சர், தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் முகத்திரை எப்போதும் போல கிழிந்து இருக்கிறது. தவறு செய்தவர்கள் எங்கோ இருக்க.. தட்டிக் கேட்க நினைப்பவர்ளை கைது செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரலும் கருத்து சுதந்திரத்தின் குரலும் நெறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. முருகனுக்கு மாநாடு ந டத்துக்குறோம் என்று பொய் வேஷம் இட்டுவிட்டு இன்று என்னப்பன் திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்களை கைது செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். முருகனுக்கும் மக்களுக்கும் இந்த தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்