சவுதியில் வேலைக்கு சென்ற தனக்கு உரிய ஊதியம் கொடுக்காமல், அங்குள்ளவர்கள் சித்திரவதை செய்வதாக தொழிலாளி ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஓடைக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சவுதிக்கு வேலைக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கட்டிட வேலைக்கு என அழைத்துச் சென்றவர்கள், அங்கு மண் அள்ள வைத்தும், உரிய முறையில் உணவு, தங்கும் இடம் மற்றும் ஊதியம் கொடுக்காமலும் பல்வேறு சித்தரவதைகள் செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
எனவே, எப்படியாவது நல்லதம்பியை மீட்டு அழைத்து வரவேண்டுமென அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.