சென்னையில் வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், இரவு நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அங்கிருந்து மாதவரம் செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த சிலர், சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, சாலையில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.