ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தமட்டில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண்கள், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண்கள், 37 மாற்று பாலினத்தினர் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்த முறை 20 சதவீதம் கூடுதலாக 852 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 308 சரிபார்ப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.