உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூரை அடுத்த பம்பிபூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் ரயில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
பம்பிபூர் ரயில் நிலையம் அருகே நின்ற சரக்கு ரயில் மீது அவ்வழியாக வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் என்ஜினும் கார்டு பெட்டியும் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவத்தில் சரக்கு ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.