உலகின் நீண்ட மலைத் தொடரான அக்கோன்காகுவா மலைத் தொடரில் ஏறி சாதனை படைத்து, தமிழகம் திரும்பிய வீரருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில் அக்கோன்காகுவா மலைத் தொடர் உள்ளது. இந்த மலைத் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியன் என்பவர், 6 ஆயிரத்து 962 மீட்டர் தூரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் சுப்பிரமணியன், தமக்கு ரோல் மாடலாக இருந்தது தமிழக மலை ஏற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி எனவும், வரும் காலத்தில் இமய மலையில் கால் தடம் பதிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என்றும் தெரிவித்தார்.