ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டது.
ஹொக்கைடோ மாகாணத்துக்கு உட்பட்ட ஒபிஹிரோ நகரில் ஒரே இரவில் 120 சென்டிமீட்டர் ஆழத்துக்கு பனிப்பொழிந்தது. இதனால் வீட்டு வாசலில் இடுப்பளவு தேங்கிய பனியில் ஒருவர் உற்சாகமாக குதித்து விளையாடினார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய பனிக்கட்டிகளைப் பொதுமக்கள் அதற்கான கருவியைக் கொண்டு அகற்றினர்.
மேலும் அதீத பனிப்பொழிவால் சாலையே தெரியாத அளவுக்கு பனி படர்ந்ததால், வாகனங்கள் பனியில் சிக்கிக் கொண்டன. காரின் சக்கரத்தில் சிக்கிய பனியை அகற்றி வாகனத்தை அதன் உரிமையாளர்கள் மீட்டனர்.
இதேபோல அமெரிக்காவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. வானிலிருந்து பஞ்சுத் துகள் போல பனிக்கட்டிகள் கொட்டியதால், 6 மாகாணங்களில் 6 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகினர். பனி மூட்டம் காரணமாக 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 5,000 விமானங்கள் தாதமதமாக இயக்கப்பட்டன. மிசோரி மாகாணத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.