கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பிரியாணியும், பொரித்த கோழியும் வழங்க வேண்டும் என மழலை மொழி மாறாமல் பேசிய சிறுவனின் விடியோ பேசுபொருளானது.
அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் சிறுவன் ஷிங்குவின் வைரல் வீடியோவை கண்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அதனை மேற்கோள்காட்டி பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என பதிலளித்துள்ளார்.