புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவாறு பாஜகவினர் பேரணி சென்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளி பகுதியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
வேலூரில் கந்த சஷ்டி கவசம் பாடியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் முருகன் கோயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.