மிகச் சிறந்த நண்பர் என்பதால்தான் தங்கள் நாட்டு மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அதிபர் டிரம்ப், காசா பகுதியை கையகப்படுத்த அமெரிக்கா ஒரு அசாதாரண திட்டத்தை வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், காசாவில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். காசாவில் அமெரிக்க ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம் என்றும் அவர் கூறினார்.