திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், சிக்கந்தர் தர்காவுக்கும் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லவும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்லவும் காவல்துறை அனுமதி மறுத்து வந்தது.
இந்த நிலையில், தற்போது தீவிர பரிசோதனை மற்றும் அடையாள அட்டைகளை காண்பித்து காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூட்டம் கூட்டமாக செல்லாமல், 2 அல்லது 3 பேராக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.