மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாக மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி பாஜகவினர், இந்து முன்னணியினர் என சுமார் 400க்கு மேற்பட்டோர் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.