கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதாக அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் கீரணத்தம் ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு வரிச்சுமை அதிகமாவதுடன், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்டவையும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், கோவை மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசை கண்டித்து, கீரணத்தம் பேருந்து நிலையம் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணையை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.