திருப்பத்தூரில் வாடகை வீட்டில் வசித்துவந்த பெண்ணை காலி செய்யக்கூறி வீட்டின் உரிமையாளர் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மலர்கொடி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார்.
கடந்த 3 வருடங்களாக அவர் வசித்துவந்த வீட்டை, பிரபாகரன் என்பவர் வாங்கியுள்ளார். இதையடுத்து வீட்டை காலி செய்யக்கூறி மலர்கொடிக்கு விஜயகுமார் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் மலர்கொடி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மலர்கொடியை பிரபாகரன் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.