திருப்பத்தூர் மாவட்டம், எலவம்பட்டியில் தம்பதி மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
எலவம்பட்டி சிலம்புநகரை சேர்ந்த கோவிந்தன் – கௌரி தம்பதியர் வழக்கம் போல் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது போலி சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தம்பதி மீது மயக்க ஸ்பிரே அடித்துள்ளனர்.
இதனையடுத்து தம்பதி இருவரும் மயக்க நிலைக்கு சென்ற நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் எழுந்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த கோவிந்தன் – கௌரி தம்பதி, போலீசில் புகாரளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.