பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடிமரம் முன்புள்ள மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றுதைப்பூசத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், தங்குமிடம், குடிநீர், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.