காஞ்சிபுரம் அருகே இறந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அவதி அடைந்தனர்..
காஞ்சிபுரம் மாவட்டம், நெல்லிமேடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், மரணம் அடைந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல போதிய சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சரஸ்வதி என்ற மூதாட்டி இறந்த நிலையில், அவரது உடலை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்ல நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இறந்தவரின் உடலை சுமந்து செல்ல 6 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மயானத்திற்கு விரைவில் பாதை அமைத்துத்தராவிட்டால் கடும் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.