சென்னை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை கையாளும்போது விபத்து ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தில் வழக்கம்போல் கண்டெய்னர்களை கையாளும் பணி நடைபெற்றது. அப்போது போதிய அளவு அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கண்டெய்னர்கள் கீழே இறக்கும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் பாரம் தாங்காமல் பொக்லைனர் அறுந்ததில், கண்டெய்னர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக அப்போது ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.