ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரான எஸ்.ஏ.20 தொடரில் விளையாடி வரும் ரஷித் கான், அரையிறுதி போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது டி20 கிரிக்கெட்டில் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாக மாறியது. 26 வயதான ரஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், உள்ளூர் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் 472 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 461 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ரஷித் கானின் சராசரி 18 புள்ளி 08 ஆகும்.