ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் விமானங்கள் பனியில் புதைந்தவாறு காட்சியளிக்கின்றன.
டோக்கியோ, புகுஷிமா, ஓகுனி, யமகட்டா , அஷிபெட்சு என நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஒபிஹிரோ நகரத்தில் உள்ள விமான நிலையம் பனியில் புதைந்தவாறு காணப்படுகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் ரயில் சேவை, பேருந்து சேவை முடங்கியுள்ளது.