உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைகழக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான வழக்கு, நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதங்களை முன்வைக்க உள்ளர். ஆளுநர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி வாதிடுகிறார்.
வாதங்கள் முடிந்தால் உச்சநீதிமன்றம் இன்றே உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.