ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழகன்குளம் நாடார் வலசை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்தும் மது பிரியர்கள் அப்பகுதியில் செல்லும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிகழ்விடம் வந்த அதிகாரிகள் 10 நாட்களுக்குள் கடை அகற்றப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கடையை திறக்க ஊழியர்கள் வந்ததால், அதை தடுக்கச் சென்ற பெண்களை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் அடிக்க பாய்ந்ததாக கூறிய பொதுமக்கள் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடையை மூடவில்லை எனில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.