ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை ட்ரோன் உதவியுடன் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கொத்தப்பூடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும், சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், கொத்தப்பூடி வனப்பகுதியில் ட்ரோன் மேராக்களை பறக்கவிட்டு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
ட்ரோன் கேமராவை கண்டதும் சூதாட்டக்காரர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். ஆனாலும், போலீசார் அவர்களை ட்ரோன் மூலம் விரட்டிச் சென்று இருப்பிடத்தை அடையாளம் கண்டு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.