விவசாயிகளுக்குஇலவச மின்சாரம் கிடைப்பதற்குக் காரணமான ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று. தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவி, தனது வாழ்நாள் முழுவதும் விவசாய நலனுக்காகவும், விவசாயிகள் நல்வாழ்வுக்காகவும் வாழ்ந்த ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் பிறந்தநாள் நூற்றாண்டு தினம் என தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகவும், விவசாயப் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தவும், ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் தன்னலமற்ற செயல்பாடுகள், அவரை உழவர் பெருந்தலைவர் என்று அன்போடு அழைக்குமளவுக்கு உயர்வானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு இன்று இலவச மின்சாரம் கிடைப்பதற்குக் காரணமான ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.