தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு கம்பிவேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி நகர பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
காசிவிசுவநாதர் கோயிலின் ராஜகோபுரம் அருகே கம்பிவேலி அமைக்கும் முயற்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு இந்து அமைப்பினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்தனர்.
எந்தவிதமான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கேட் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் பாஜகவினர் மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கம்பிவேலி அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, கோயில் வளாகத்தில் பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.