மீனவர்களின் நலன் கருதி பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, மீனவர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கான வளர்ச்சியை முக்கியத்துவப்படுத்தும் நோக்கில் மீன்வளத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியதை மேற்கொள் காட்டினார்.
அந்த வகையில், ‘விவசாயக் கடன் அட்டை’ திட்டத்தைப் பயன்படுத்தி மீனவ சமுதாய மக்களும் பயனடைந்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் மீன்வளத்துறைக்கென பட்ஜெட்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை பிரதமர் மோடி சுட்டிக் காட்டியபோது பாஜக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.