நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு - உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!
Sep 10, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 06:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் அனுமதி அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒருமுறை ஆளுநர் நிராகரித்த மசோதாவை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அந்த மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும் என்றும்,
தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோருவதாகவும் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி? என்று கேட்டதுடன், அதற்கு அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? என்றும் வினவினர்.
அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் தனக்கு வேண்டியபடி ஆளுநர் சுயமாக முடிவு எடுத்துள்ளதாக பதிலளித்தார்.

எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை ஆளுநர் ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை விளக்க வேண்டும் என்றுகூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: Justices J.P. Parthiwalasupreme courtGovernor R.N.Ravitamil nadu governmentindirect legalisation of the bills through the courts.
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி

Next Post

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்!

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies