சென்னை கிளாம்பாக்கத்தில் வட மாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஆட்டோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்ற சில நபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுனர் தயாளன், முத்தமிழ்செல்வன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் மீது பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆட்டோவின் உரிமையாளர் வெங்கட் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.