ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் அமைச்சர் - திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா என அண்ணாமலை கேள்வி!
Aug 30, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் அமைச்சர் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா என அண்ணாமலை கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயிர்க் கடன் தள்ளுபடி  தொடர்பாக ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் அமைச்சர் பெரியகருப்பன் பதிலளிப்பதாகவும்,  திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் அமைச்சர் திரு. பெரியகருப்பன் பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை என்றும். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 – 2022 முதல் 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே? நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா எனறும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவு கட்டு!

Next Post

பொதுத்தேர்வு – தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies