கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியது.
முட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர், மருதுகோட்டை பகுதியில் உள்ள டீக்கடையில் பேசிக் கொண்டிருந்த அவர், சாலையின் மறுபுறம் தனது நண்பர் வருவதைக் கண்டவுடன் சத்தமிட்டபடியே திடீரென சாலையைக் கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
எனினும், நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் அலெக்சாண்டர் உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் தேநீர் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.