திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி அருகே உள்ள கொசவப்பட்டியில் புனித உத்திரியமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், பழனி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.