ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல் நீரோடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேனை போலீசார் சுற்றி வளைத்தபோது, வேனில் இருந்த 10 பேர் தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 30 கிலோ எடையுள்ள 80 மூட்டை பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.