பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற WAVES ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், உலக ஆடியோ காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவை ஒரு துடிப்பான படைப்பு சுற்றுச்சூழல் அமைப்பாக நிறுவுவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, இந்தியாவை உலகளாவிய பொழுதுபோக்கு மையமாக மேம்படுத்துவதற்கான நிபுணர் நுண்ணறிவுகளை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்த்துள்ளார்.
நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.