புதுச்சேரியில் 35வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், மாநில வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சி தொடங்கியது. காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர்கள், காய் கணிகளை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
குறிப்பாக கண்காட்சியில், திராட்சையில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன், ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில் என்ஜின், மலரால் ஆன வயலின் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இக்காண்காட்சியை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.