டெல்லியில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மிகப்பெரிய வெற்றியை டெல்லியில் பெற்றுள்ளது. இதே போல 2026ல் தமிழகத்தில் இப்படி ஒரு வெற்றியை பாஜக பதிவு செய்யும் என தெரிவித்தார்.
இண்டி கூட்டணி ஒரு தேர்தலை கூட வெற்றிகரமாக எதிர்கொள்ளவில்லை, ஆம் ஆத்மி தோல்வி, காங்கிரஸ் தோல்வி, திமுக தாம் அங்கம் வகிக்கும் கூட்டணியை முறைப்படுத்தப்பட்ட கூட்டணியாக கூட ஏற்கவில்லை.
ஒரு கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக வெற்றி பெறாது என்று சொன்ன நிலையில் தற்போது பாஜகவுக்கு பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
பாஜக சமுதாயம் மற்றும் மதத்திற்கு எதிரானது என்று சிலர் பொய் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவைகள் எல்லாம் இனி செல்லாது. அதே சமயம் ஈரோட்டில் திமுகவுக்கு தோல்வியான வெற்றி முகம் தான். நாங்கள் எல்லாம் பந்தயத்தில் இல்லை என்பது தான், இதனை குறிக்கிறது. வேங்கை வயலில் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை, எனவே தலைநகரில் கூட அவர்களுக்கு வெற்றி வாய்ப்பில்லை, எல்லாமே அதிர்ச்சி தான் என தெரிவித்தார்.
இனிமேல் திருமாவளவன் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும், இன்னும் பல அதிர்ச்சிகளை பார்க்க வேண்டி இருக்கும் இப்போது டெல்லி தேர்தலை கொண்டாடுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.