முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படாது என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதிதாக துவங்கப்பட உள்ள முதல்வர் மருந்தகம் மற்றும் நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் துவக்கி வைக்கப்படும் எனவும், முதல்வர் மருந்தகம் மூலம் 186 வகையான தரமுள்ள மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
300 தனிநபர்களும், 440 சொசைட்டிக்களும் முதல்வர் மருந்தகத்திற்கு லைசன்ஸ் பெற்றுள்ளதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் 898 கடைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் முதல்வர் மருந்தகம் தொடங்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.