டெல்லியைச் சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம் மற்றும் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
உடைந்த சாலைகள், குப்பைக் குவியல்கள், நிரம்பி வழியும் சாக்கடைகள் மற்றும் மாசுபட்ட காற்று ஆகியவை டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதை எதிர்காலத்திற்கு ஏற்ற நகரமாக பாஜக மாற்றும் என தெரிவித்தார்.
டெல்லி ஒரு மினி இந்தியா போன்றது, இங்கு அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள், அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார்.
பெண் சக்தி எப்போதும் என்னை ஆசீர்வதித்துள்ளது, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றியுள்ளேன், மீண்டும் டெல்லியில் அதைச் செய்வேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜகவை நம்பி வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
டெல்லி தேர்தல் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டரையும் வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்கள் ஒரு நிலையான மற்றும் இரட்டை இயந்திர அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
டெல்லியைச் சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம் மற்றும் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
அரசியலில் குறுக்குவழிகள், பொய்கள் மற்றும் வஞ்சகங்களுக்கு இடமில்லை என்றும் டெல்லியின் வளர்ச்சியில் ஒரு பெரிய தடையை டெல்லி மக்கள் அகற்றிவிட்டீர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.