NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி ஏர் ஷோ நடத்தப்பட்டது இதனை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டட மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ ககன்யான் மிஷன் தலைவர் விஞ்ஞானி ராம்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போது 100 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் அதிக எடை சுமக்கும் என்.ஜி.எல்.வி. என்ற ராக்கெட் தயாரிப்பு பணியை தொடங்க மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.