டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 45 புள்ளி 56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
டெல்லி சட்டபேரவை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் 45 புள்ளி 56 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 43 புள்ளி 57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பிரதான கட்சிகளான காங்கிரஸ் 6 புள்ளி 34 சதவீத வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 1 புள்ளி 06 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளதாகவும், பிற கட்சிகள் ஒரு சதவீத வாக்குகளைக்கூட பெற தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.