தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் தமிழக மின்வாரியத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி உயர்கல்வித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும், மின்வாரிய தலைவராக இருந்த நந்தகுமார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ப.செந்தில்குமாரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்-ஸை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக சந்திரமோகன் ஐஏஎஸ்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக வினீத் ஐஏஎஸ்ஸும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குனராக அன்சுல் மிஸ்ராவையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும செயலாளராக பிரபாகர் ஐஏஎஸ்ஸும், திறன் மேம்பாட்டு கழக இயக்குனராக கிராந்திகுமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங்கும், கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐஏஎஸ்-ஐ மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.