இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 49 புள்ளி 5 ஓவரில் இங்கிலாந்து அணி 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் வலுசேர்த்து.
44 புள்ளி 3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 308 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டி எஞ்சியுள்ள நிலையில், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.