தேர்வுகள் தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் 8வது முறையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரிய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 36 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாணவர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி, மாணவர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், யாரிடமும் தயக்கமின்ற தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.