தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி வருகை தந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், 6ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவத்தை ஒட்டி திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வரும் நிலையில், 3 ஆயிரத்து 500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.