மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் ஏஜெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், ராமசுப்ரமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.