தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீர் மற்றும் குப்பைகள் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போடிதாசன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி கிராமத்தில் இந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர், கழிவுநீருடன் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.