பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் தத்துவம் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய நினைவு தினத்ததில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அனைவருக்கும் சமத்துவத்தையும் அதிகபட்ச நன்மையையும் உறுதி செய்யும் இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தில் ஒரு வலுவான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வலுவான ஆதரவாளராக அவர் இருந்தார் என தெரிவித்துள்ளார்.
இன்று, இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், அவரது ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் தத்துவம் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.