பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பாரதீய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர் எ ன தெரிவித்துள்ளார்.
முழு நேரப் பிரச்சாரகராக தன்னை தேசத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர், மக்களிடைய தேசிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்ததாகவும், அனைத்து மக்களுக்குமான முன்னேற்றம் மற்றும் சுதேசி போன்ற கொள்கைகளை தீவிரமாக ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.
இன்றும் தேசத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களும், அரசாங்க மருத்துவமனைகளும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்பதே, அவர் தேசத்தின் நலனுக்காக உழைத்ததற்கான சாட்சியாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினமான இன்று, அவருடைய தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.