உதகையில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 200க்கும் மேற்பட்ட ரகங்களில் 2 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட ஜின்னியா மலர்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா ஆகிய வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.